பிரசித்தி பெற்ற கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்… அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 3:33 pm
Quick Share

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ திருக்காமீசுவரர் கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீ திருக்காமீசுவரர் திருகோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் மிகப்பெரிய தெப்பக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் ஏகப்பட்ட மீன்கள் உள்ளன. கோயிலுக்கு ஒரு பக்தர்கள் மீன்களுக்கு உணவாக பொறி அவள் உள்ளிட்வைகளை வழங்கி மீன்களை பார்த்து ரசிப்பது வழக்கமாக இருந்து வந்தது.

மேலும், இந்த மீன்களை பார்ப்பதற்காகவே கோவிலுக்கு தினந்தோறும் ஒரு கூட்டம் வந்து செல்வது என்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இக்கோயில் குளத்தில் ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்ததால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினார்கள்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் தகவல் தெரிவித்தும் இறந்து மிதந்த மீன்களை கோவில் நிர்வாகம் வெளியேற்றாமல் இருந்ததால் கோவிலுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசியது. இதனை தொடர்ந்து மீன்கள் எதனால் இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் மேலும் கோவில் தெப்பக்குளத்தில் இறந்துள்ள மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், அடிக்கடி குளத்தில் தண்ணீரை மாற்றும் நிலையில் நீங்கள் எதனால் இறந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருக்காமேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதப்பது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 297

0

0