மனைவியின் நடத்தையில் சந்தேகம்… காய் வெட்டும் கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் தலைமறைவு

Author: Babu Lakshmanan
26 August 2022, 5:50 pm
Quick Share

கரூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை NGGO காலணியில் வசிப்பவர் சிவா (என்கின்ற) செல்வராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு சத்யா என்கின்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சத்யாவும் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவர் மனைவியிடம் அடிக்கடி சண்டையிடுவதை வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கட்டிட வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சத்தியாவிடம், அவரது கணவர் சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, கணவர் வீட்டில் காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சத்தியாவை விட்டு விட்டு, அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் தனது மூத்த மகனிடம் , அம்மாவை கத்தியால் குத்தி விட்டதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி சொல்லி விட்டு சென்று விட்டார்.

இதனையடுத்து, வீட்டிற்கு வாடகை ஆட்டோவை உடன் கூட்டிச் சென்ற மகன், தாய் சத்யாவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தலைமறைவாக உள்ள கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

தலைமறைவாக உள்ள சிவா என்கின்ற செல்வராஜ் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் சிறைக்கு சென்று தண்டனை குற்றவாளி என்றும், மேலும் வழக்குகள் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் அவர் மீது உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Views: - 295

1

0