சென்னை மக்களே உஷார்: நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்…குடிநீர் வாரியம் திடீர் அறிவிப்பு..!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 11:19 am
Quick Share

சென்னை: சென்னையில் நாளை 8 பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

நெம்மேலியில் நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாளை காலை 6 மணி முதல் 25ம் தேதி காலை 10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

பராமரிப்பு பணிகள் நிறுத்தப்படும் நேரத்தில் சென்னையில் உள்ள பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்த கூடுதல் தகவல்களை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகுதி 9 மயிலாப்பூர், மந்தைவெளி பொறியாளர் செல்போன் எண் 81449-30909, பகுதி 13 அடையார், வேளச்சேரி, பெசன்ட் நகர், திருவான்மியூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30913, பகுதி 14 கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி பொறியாளர் செல்போன் எண் 81449-30914, பகுதி 15 ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் பொறியாளர் செல்போன் எண் 81449-30915 தொடர்பு கொண்டு பயனடையலாம் என்ற அறிவிப்பை சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 178

0

0