கொளுத்தும் வெயில்… தவிக்கும் தாகம்… ஆரம்ப சுகாதார நிலையத்தில் தண்ணீர் என நினைத்து குளுக்கோஸுகளை குடிக்கும் குரங்குகள்!

Author: Babu Lakshmanan
9 May 2024, 8:25 pm
Quick Share

பேரணாம்பட்டில் வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் அகற்றப்படாமல் திறந்தவெளியில் சேமித்து வைத்துள்ளதால், குரங்குகள் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் என நினைத்து நோயாளிக்கு செலுத்தியது குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோஸ்களை தண்ணீர் என நினைத்து குடித்து வருகின்றது.

மேலும் படிக்க: விஜயகாந்திற்கு பத்மவிபூசன் விருது… விருதை வாங்கிய பிறகு ஒரு நிமிடம் கண்களை மூடி பிரேமலதா செய்த செயல்!

குளுக்கோஸ் பாட்டில்களையும், நோயாளிகளுக்கு செலுத்தப்படும் ஊசிகளையும் பொது இடத்தில் எடுத்துச் சென்று விசி செல்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோயாளிக்கு செலுத்தப்பட்ட ஊசி மற்றும் குளுக்கோசுகளை திறந்தவெளியில் போட வேண்டாம் என தெரிவித்தும் அலட்சியம் காட்டி வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த நிலையில், வெயிலின் தாக்கத்தால் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோசுகளை தண்ணீர் என நினைத்து குரங்குகள் குடிக்கும் காட்சிகள் பார்ப்போரை வேதனையில் ஆழ்த்தியது.

எனவே நோயாளிக்கு செலுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டுகளை தினந்தோறும் அப்புறப்படுத்தி குரங்குகளை காப்பாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 136

0

0

Leave a Reply