மீண்டும் மிக கனமழை எச்சரிக்கையால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை: எந்தெந்த இடங்களில் தெரியுமா?

Author: Udhayakumar Raman
17 November 2021, 11:51 pm
heavy rain - school leave - updatenews360
Quick Share

சென்னை: கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா – வட தமிழக கடற்கரை நோக்கி நகர்கிறது.இதனால் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்திற்கு நாளை ரெட் அலெர்ட் வானிலை ஆய்வு மையம் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கனமழை எச்சரிக்கையால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 197

0

0