நேர பிரச்சனையால் தனியார் பேருந்துகள் நேருக்கு நேராக மோதவிட்டு தகராறு : எல்லை மீறும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள்… பயணிகள் அச்சம்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 November 2022, 12:26 pm

கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேருந்து ஊழியர்கள் போதையில் தாக்கி கொள்வது. பயணிகளை தாக்குவது, அடி தடி போன்ற குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது உள்ளது.

இந்நிலையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேர பிரச்சனையால் பேருந்துகளை மோத விட்டு ஊழியர்கள் தகராறில் ஈடுபட்டனர்.பின்னர் இது குறித்து காந்திபுரம் போக்குவரத்து பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர்.

பின்னர் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு கலைந்து சென்று விட்டனர். மேலும் அப்பகுதியில் காவல் நிலையம் முன்பு வாக்குவாதத்தில் ஈடுபடும் பேருந்து ஊழியர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • sai abhyankkar composing music 8 big productions ஒரு படம் கூட ரிலீஸ் ஆகலை? ஆனா 8 பெரிய படங்களுக்கு மியூசிக் டைரக்டர்! இது சாய் அப்யங்கர் Era…