இதுக்காகலாம் வம்புக்கு வரக்கூடாது.. ஆளுநருக்கு துரைமுருகன் பதிலடி!

Author: Hariharasudhan
19 October 2024, 7:25 pm

தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாக முதல்வர் சுட்டிக் காட்டியதற்காகலாம் வம்புக்கு ஆளுநர் வரக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதியில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக நீர்வளம் மற்றும் கனிமம் சுங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து, 143 விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

RN RAVI

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடநல் திருநாடும் என்ற வார்த்தையை விட்டு பாடியதை முதல்வர் சுட்டிக் காட்டியுள்ளார். எனவே, சுட்டிக் காட்டியவர்களுடன் வம்புக்கு வரக்கூடாது.

இதையும் படிங்க: என்னை குளோஸ் பண்ண அதுதான் காரணம்.. கும்பிட்டுக் கூறிய நாசர்!

யார் விடுபட்டு பாடினாரோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று, எதற்கு பார்த்தாலும் வெள்ளை அறிக்கை வேண்டும் என அதிமுக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்கிறார். அதனை நான் வெள்ளை பேப்பரில் எழுதி கருப்பு அறிக்கையாக தருகிறேன். படித்துக் கொள்ள சொல்லுங்கள்” எனக் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!