நடிகர் விக்ரமின் ஜெமினி படத்தில் நடித்த துரைப்பாண்டியன் காலமானார்..!
9 September 2020, 8:58 amபிரபல கிரிமினல் வழக்கறிஞரும், நடிகருமான துரைப்பாண்டியன் காலமானார். நுரையீரல் பிரச்னை மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு நீண்ட நாளாக துரைப்பாண்டியன் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் உடல்நிலை சரியில்லாததால் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் நேற்று மதியம் 1 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார்.
நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். கிரிமினல் வழக்கறிஞரான இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவிலும் உள்ளார். இவரின் உயிரிழப்பிற்கு தலைவர்கள், பிரபலங்கள், வழக்கறிஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
0
0