‘நினைத்தது பலித்தது‘.. 7 கி.மீ தூரம் பாத யாத்திரை சென்று சமயபுர மாரியம்மனை வழிபட்ட துர்கா ஸ்டாலின்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 11:17 am
Durga Stalin -Updatenews360
Quick Share

திருச்சி : வேண்டுதல் நிறைவேறியதால் பாதயாத்திரை சென்று திருச்சி சமயபுரம் மாரியம்மனை துர்கா ஸ்டாலின் வழிபாடு செய்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தெய்வப்பக்தி கொண்டவர். என்னதான் வீட்டில் உள்ள அனைவரும் கடவுள் மறுப்பு கொள்கை கொண்டிருந்தாலும் துர்கா கோவிலுக்கு செல்வதை அவர்கள் தடுப்பதில்லை.

Durga Stalin (M. K. Stalin Wife) Wiki, Biography, Age, Family, Images -  wikimylinks

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்த போது, கோவில் கோவிலாக துர்கா ஸ்டாலின் வழிபட்டு வந்தார், திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என பல கோவில்களுக்கு சென்று வழிபட்டதாக செய்திகளும் வெளியானது.

அதாவது கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடைபெறுவதற்கு முன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு துர்கா ஸ்டாலின் வந்திருந்தார். தற்போது வேண்டுதல் நிறைவேறியதால் கடந்த வாரம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

MK Stalin's wife Durga threatens to sue Vikatan: Wants apology, Rs 10 cr in  damages | The News Minute

இந்த நிலையில் திருச்சி வந்த துர்கா ஸ்டாலின், திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றி தங்கியிருந்த அவர், மாவை 5 மணிக்கு மேல் அங்கிருந்த பாத யாத்திரையாக 7 கிமீ தூரம் நடந்து கோவிலுக்கு வந்தார்.

What is the religion of Karunanidhi? - Quora

சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின், பின்னர் இரவு டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார். இதையடுத்து இன்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதனை வழிபட்டார். இதையடுத்து உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

Views: - 575

0

0