இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை…! தலைமை செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

10 August 2020, 7:47 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை: இ பாஸ் விவகாரத்தில் தலைமை செயலாளருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. சென்னையில் ஒரு பக்கம் குறைந்தாலும், மாவட்டங்கள் பலவற்றில் தொற்று உச்சத்தில் இருக்கிறது. அதேநேரத்தில் கொரோனா குணம் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக ஒரு மாவட்டத்தில் இருந்து, இன்னொரு மாவட்டம் செல்ல இ பாஸ் என்ற நடைமுறையை அமல்படுத்தியது.

இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை சார்பில்  மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், மத்திய அரசு இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள் அளித்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் சொந்த ஊரிலிருந்து வேறு இடங்களுக்கு செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். இது மனித உரிமை மீறல் இல்லையா? எனவே தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக தலைமை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.