குலாப் புயல் எதிரொலி : தமிழகத்தில் 5 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 11:05 am
Cyclone Warn - Updatenews360
Quick Share

கடலூர் : குலாப் புயல் எதிரொலி கடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட மேற்கு வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்த புயலானது தற்போது கலிங்கப்பட்டிணத்திற்கு சுமார் 440 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே கலிங்கப்பட்டினம் அருகே 26 தேதி கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலூர் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதே போல பாம்பன், புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Views: - 248

0

0