நிவர் புயல் எதிரொலி : சென்னையில் 24 விமான சேவைகள் ரத்து!!
25 November 2020, 9:42 amநிவர் புயல் காரணமாக சென்னையில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிவர் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஹீப்ளி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லக்கூடிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல இந்த நகரங்களில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது 24 விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0
0