தப்பு நடப்பதால் அமலாக்கத்துறை சோதனை.. இதில் பாஜகவுக்கு தொடாபில்லை : நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan16 May 2025, 4:57 pm
மதுரையில் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை வேலம்மாள் கல்லூரி விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதையும் படியுங்க: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்.. கூலித் தொழிலாளியின் மகள்கள் அசத்தல்!
டாஸ்மாக் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்து கேள்விக்கு, ஈடிக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை, ஏதாவது தவறு இருந்தால் தான் சோதனை இடுவார்கள் தேவையில்லாமல் சோதனை நடத்த மாட்டார்கள். தற்போது நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை குறித்து எனக்கு தெரியாது.முழுவதையும் தெரிந்து கொண்டு அதன் பிறகு பதில் அளிக்கிறேன் என்றார்.
2026 மட்டுமல்ல 2031,36 லும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என தமிழக முதல்வர் கூறியது குறித்து கேள்விக்கு, ஒரு கட்சி ஆட்சி அமைப்பது குறித்து கருத்து தெரிவித்தாலும் ஆட்சி அமைக்கும் முடிவை மக்களே தீர்மானிப்பார்கள் என எம்.ஜி.ஆர் கட்சி துவங்கிய காலத்திலேயே தெரிவித்தார்.

அது போல் வெற்றியும் பெற்றார் எனவே மு க ஸ்டாலின் அவருடைய கருத்தை தெரிவித்து இருந்தாலும் முதல்வர் அவரது கருத்தை தெரிவித்துள்ளார் ஆட்சி அமைக்கும் முடிவை மக்களே தீர்மானிப்பார்கள்
சென்னை வந்த அமித்ஷா ஓபிஎஸ்ஸை சந்திக்காமல் சென்றது வருத்தம் அளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார் கூட்டணியில் ஓபிஎஸ் இருக்கிறாரா? அமித்ஷா வந்தது வேறு விசயமாக வந்ததால் ஓபிஎஸ்ஸை சந்திக்கவில்லை ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருப்பதால் அவர்களிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை.

மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் பாஜக ஆட்சியில் பங்கு கேட்குமா? என்ற கேள்விக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர வேண்டும் அதற்கு முன்பாக போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் யார் வேட்பாளர் என்பதை அறிவிக்க வேண்டும் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அதன் பிறகு இது பற்றி பேசலாம் இன்னும் ஒரு வருடம் உள்ளது என்றார்.
