ஓட்டுப் போட வருமாறு அழைப்பு விடுத்ததால் ஆத்திரம்… வட்டாட்சியரை விரட்டியடித்த ஏகனாபுரம் மக்கள்!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 4:29 pm
Quick Share

காஞ்சிபுரம் ; தேர்தலை புறக்கணித்துள்ள மக்களை ஓட்டுப்போட வருமாறு அழைத்த வட்டாட்சியரை ஏகனாபுரம் கிராம மக்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு வகையில் ஏகனாபுரம் ஊர் மக்கள் 600 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர் . ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்த நிலையில், ஏகனாபுரம் அரசு பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட வாக்களிக்க வரவில்லை.

மேலும் படிக்க: மலையாளத்தில் வேட்பாளர்கள் பெயர்… சத்தியமங்கலம் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ; அதிர்ச்சியில் வாக்காளர்கள்.!!

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தாலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் ஏகனாபுரம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தற்போது வாக்களிக்க யாரும் வராமல் உள்ளனர். ஏகனாபுரம், நாகப்பட்டு ஆகிய இரு கிராமங்களில் 1400 வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் வசிக்கும் கிராம நிர்வாக உதவியாளரை தாசில்தார் சென்று வாக்களிக்க வற்புறுத்தியதால் அவருடைய வாகனத்தை சிறை பிடித்து மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. வாக்களிக்க விட்டால் வேலையை விட்டு எடுத்து விடுவேன் என தாசில்தார் கூறியதாகவும் கூறப்படுகிறது.

தாசில்தார் சுந்தரமூர்த்தியை கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வீட்டில் அமர்ந்து ஓட்டு போடும் படி நிர்ப்பந்தப்படுத்தியுள்ளார். அதனை கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தாசில்தார் வந்த அரசு வாகனத்தை சிறை பிடித்தனர்.

Views: - 85

0

0

Leave a Reply