மலையாளத்தில் வேட்பாளர்கள் பெயர்… சத்தியமங்கலம் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பு ; அதிர்ச்சியில் வாக்காளர்கள்.!!

Author: Babu Lakshmanan
19 April 2024, 4:02 pm
Quick Share

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், தாளவாடி மலைப்பகுதி உள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில், போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களுடைய சின்னம் குறித்து விவரங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்கும்.

மேலும் படிக்க: அதிக வாக்குப்பதிவு மகிழ்ச்சியே.. செல்லுமிடமெல்லாம் வரவேற்பு : நெகிழ்ச்சியில் சௌமியா அன்புமணி!

வழக்கமாக, தமிழ் மொழியில் அச்சிட்டு ஒட்டப்படும் இந்த போஸ்டரில், மலையாள மொழியில் அச்சிடப்பட்ட வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்தின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருந்தது. இதனை பார்த்த வாக்காளர்கள் அதனை படிக்க முடியாமல் என்ன செய்வது என்று திகைத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, வாக்குப்பதிவு மையத்தில் இருந்த தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களின் பெயர்களை மலையாள மொழிக்கு அருகிலேயே, தமிழில் எழுதினார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 168

0

0