அதிக வாக்குப்பதிவு மகிழ்ச்சியே.. செல்லுமிடமெல்லாம் வரவேற்பு : நெகிழ்ச்சியில் சௌமியா அன்புமணி!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 2:47 pm
sow
Quick Share

அதிக வாக்குப்பதிவு மகிழ்ச்சியே.. செல்லுமிடமெல்லாம் வரவேற்பு : நெகிழ்ச்சியில் சௌமியா அன்புமணி!

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியி்ல் போட்டியிட்டிருக்கும் பாமக வேட்பாளர் செளிமியாஅன்புமணி, தருமபுரி தொகுதியில், பாகலஅள்ளி, அவ்வையார் நகராட்சி பள்ளி, உள்ளிட்ட இடங்களிலுள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர், அமைதியான முறையில் வாக்களிப்பு நடந்து வருகிறது, ஒவ்வொரு பூத்துகளிலும் நாற்பது, ஐம்பது சதவீதம் வாக்களித்துள்ளனர்.

இளம் வாக்காளர்கள் தொடங்கி,.பெண்கள்உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களும், வெய்யிலயும் பொருட்படுத்தாமல் வாக்களித்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் வாக்களித்து சென்றிருக்கின்றனர். சென்ற இடங்களிலெல்லாம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்றார்.

Views: - 162

0

0