தொடர் மழை: வீட்டுச் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாப பலி..!!

29 September 2020, 9:21 am
Quick Share

விழுப்புரம்: விழுப்புரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் மூதாட்டி சரோஜா இவரது கணவன் செல்வராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் கூலி வேலை செய்து தனியாக கூரை வீட்டில் சரோஜா தனியாக வசித்து வந்தார். இவரது மகன் இளங்கோவன் புதுச்சேரியில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று அம்மாவை பார்க்க கிராமத்திற்கு வந்தவர். நேற்று இரவு தாயுடன் தங்கிவிட்டார். நேற்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்பொழுது நள்ளிரவில் பெய்த கனமழை காரணமாக இவர் வீட்டில் பின்புற சுவர் மழையில் நனைந்து இவர்கள் மேல் விழுந்தது இதில் சம்பவ இடத்திலே மூதாட்டி சரோஜா உயிரிழந்தார்.

இடி மின்னலுடன் மழை பெய்ததால் அக்கம் பக்கத்தினர், இன்று காலை வீடு இடிந்து இருப்பதை பார்த்த போது படுகாயமடைந்த நிலையில் இருந்த இளங்கோவனை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஏற்றி அனுப்பப்பட்டார்.

பின்னர் இதுகுறித்து தகவலின்பேரில் ஏனாதிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு இறந்த மூதாட்டியின் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Views: - 6

0

0