மக்களாட்சி செய்யும் மக்கள் நீதி மய்யம் : களமிறங்கிவிட்டது எம்மவர் படை… கமலின் குரலில் வெளியானது தேர்தல் பாடல்..!!! (வீடியோ)

3 March 2021, 5:23 pm
Makkal neethi maiam - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மக்கள் நீதி மய்யத்திற்கான தேர்தல் பாடலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தொகுதி பங்கீட்டில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், 3வது அணியை அமைப்பதில் மக்கள் நீதி மய்யம் முனைப்பு காட்டி வருகிறது. தற்போது வரை அந்தக் கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இசைவு தெரிவித்துள்ளன. மேலும், தினகரனின் அமமுகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான, மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சார பாடலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். தற்போது, இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

Views: - 10

0

0