பம்பரம் சின்னத்துக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம் : துரை வைகோ எடுத்த முடிவு.. மதிமுகவினர் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
27 March 2024, 1:02 pm

பம்பரம் சின்னத்துக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம் : துரை வைகோ எடுத்த முடிவு.. மதிமுகவினர் ஷாக்!

பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தான் கூறி உள்ளது. நீதிமன்றம் கூறவில்லை. மதியம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது எங்கள் வழக்கறிஞர்கள் வாதத்தை முன் வைத்து பம்பரம் சின்னத்தை கேட்பார்கள்.

சின்னம் விவகாரத்தில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வேட்பாளர் நல்ல வேட்பாளர் என்றால் அவரின் சின்னம் என்ன என்பதை தேடும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இன்றைய காலத்தில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க 24 மணி நேரம் கூட தேவைப்படாது. பா.ஜ.க வை உண்மையாக எதிர்க்கும் அணியாக தி.மு.க அணி இருக்கிறது. திருச்சியில் அந்த அணி சார்பில் ம.தி.மு.க போட்டியிடுகிறது. இது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

நீதிமன்றம் எங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறோம். ஒரு வேளை அது கால தாமதமானால் வேறு சின்னங்களில் போட்டியிடுவோம்.

வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை பா.ஜ.கவிற்கு ஆதரவாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் கேட்ட ஆவணங்கள் கொடுத்து விட்டோம். ஆனால் பம்பரம் சின்னம் ஒதுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தை கூறுகிறார்கள்.

ம.தி.மு.க, நாம் தமிழர், கட்சிக்கும் சின்னம் ஒதுக்கவில்லை, இரண்டு இடங்களில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஏன் இதுவரை சின்னம் ஒதுக்கப்படவில்லை.

பா.ஜ.க வை எதிர்க்கும் அரசியல் இயக்கங்கள் இருக்க கூடாது என்பதற்காக பா.ஜ.க விற்கு ஆதரவாக தேர்தல் ஆனையம் செயல்படுகிறது. அதிமுக பதட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சின்னமே முடங்க வாய்ப்பிருக்கிறது. கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் விஜயபாஸ்கர் எனக்கு வாழ்த்து கூறுவதை போல் பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கும் பா.ஜ.க விற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மத்திய பா.ஜ.க அரசு வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றை கொண்டு ஏதாவது ஒரு விதத்தில் இடைஞ்சல் கொடுத்து வருகிறார்கள்.

என்னை வெளியூர் வேட்பாளர் என்கிறார்கள். நான் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்தவன் தான். திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்துள்ளேன் என்றார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!