என்னை குறை சொல்பவர்கள் முதலில் இதை கவனியுங்க… பட்டியலிட்ட குமரி தொகுதி காங்., வேட்பாளர் விஜய் வசந்த்..!!

Author: Babu Lakshmanan
27 March 2024, 1:31 pm
Quick Share

மீண்டும் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என காங்கிரஸ் குமரி பாராளுமன்ற வேட்பாளர் எம் பி விஜய்வசந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், தற்போது கன்னியாகுமரி எம்பியுமாக உள்ள விஜய் வசந்த் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பி.என்.ஶ்ரீதரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்ல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் மேயர் மகேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முன்னதாக 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர்வலமாக வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்ய எம்பி விஜய்வசந்த், அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், எம்எல்ஏ ராஜேஷ்குமார், பிரின்ஸ், கூட்டணி கட்சியினர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியாளர் அலுவலகத்திற்கு சென்றனர்.

பின்னர், வேட்புமனு தாக்கல் செய்த எம்பி விஜய்வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- மீண்டும் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். குமரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவும், கனிம வளங்களை பாதுகாக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

தன்னை குறை செல்பவர்கள் குமரி மாவட்டத்திற்கு என்ன சாதனை செய்தார்கள். தான் தந்தை இறந்த பிறகு இடைத்தேர்தலில் இரண்டு ஆண்டுகளில் தன்னால் முடிந்ததை செய்துள்ளேன். நான்கு வழி சாலை நிறுத்தப்பட்டிருந்தது, அதை தொடங்குவதற்கு முயற்சிகள் செய்து தொடங்கியுள்ளேன்.

மேலும், மெதுவாக நடைபெற்று வந்த இரட்டை இரயில் பாதை திட்டத்தை வேகமாகதற்போது தொடங்கி நடக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் தேர்தல் நேரங்களில் இது போன்று குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வைத்துக் கொண்டுதான் வருகிறார்கள், என தெரிவித்தார்.

Views: - 337

0

0