தேர்தல் ரிசல்ட் எதிரொலி… ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் அவசரப்பட்டு காங்கிரஸ் செய்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 March 2023, 12:37 pm

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது, “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. திமுக 5 ஆண்டுகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஏறக்குறைய 80 சதவீத வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் நிறைவேற்றி இருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

குடிநீர் வழங்கும் பணி, கழிவுநீர் அகற்றும் பணி, தடைபடாத மின்விநியோகம் ஆகியவை சிறப்பாக நடக்கின்றன. எனவே மக்கள் எங்களுக்கு தான் வாக்காளிப்பார்கள். நாங்கள் கொள்கை சார்ந்த கூட்டணியாக இருக்கிறோம். எங்களை எதிர்க்கும் அதிமுக சஞ்சலத்தில் இருக்கிறார்கள்.

அவர்களால், அவர்களது அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. சஞ்சலத்தில் இருக்கிற, தன்னம்பிக்கை இல்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் தான் மகத்தான வெற்றி பெறும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அறிவித்துள்ள நிலையில், ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இல்ல முன்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகமாக்கியுள்ள வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து,.ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வசிக்கும் கச்சேரி வீதி, மண்டபம் வீதி, மனப்பாலம், மீனாட்சி சுந்தரனார் சாலை, பெருந்துறை சாலை மேட்டூர் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!