மின் இணைப்பை பெறுவதில் விவசாயிகளின் தலைவலிக்கு தீர்வு : வரவேற்பை பெற்ற தமிழக அரசின் புதிய நடைமுறை..!

10 September 2020, 5:47 pm
farm eb -power - updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அனைத்து தொழில்களும் முடங்கி போயுள்ளன. எனவே, இந்தத் தொழில்களுக்கு 3வது கட்ட தளர்வுகள் பற்றி அறிவிப்பின் போதுதான், இயங்க அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால், ஊரடங்கின் போதே தளர்வுகள் அளிக்கப்பட்ட விவசாயத் தொழிலுக்கு, பல்வேறு சலுகைகளையும், மானியங்களையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

இருப்பினும், விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு பெறுவது மற்றும் மின் இணைப்பை இடமாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கைகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் நிலவி வந்தன. இதனால், மின் இணைப்பை பெறவோ அல்லது ஏற்கனவே உள்ள மின் இணைப்பை வேறு பகுதிக்கு மாற்றுவதோ, விவசாயிகளுக்கு பெரிய சவாலான காரியமாக இருந்து வந்தது.

இதனை புரிந்து கொண்ட தமிழக அரசு, தற்போது தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான கழகத்தின் விதிகளில் திருத்தம் செய்துள்ளது.

அதன்படி, குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலம் இருப்பவர்களின் கிணறு மற்றும் நிலத்தின் உரிமை சான்றை கிராம அலுவலரிடம் பெற்று இருந்தாலே போதுமானது. அதேபோல, விவசாயத்திற்கான மின் இணைப்பை மாற்ற இந்தப் பகுதி அதிகாரிகளிடம் மட்டும் தான் சென்று பெற முடியும் என்பதை தளர்த்தி, தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் விண்ணப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

நிலம் விற்கப்பட்ட பிறகு கிணறு மட்டுமே சொந்தமாக இருந்தால் மின் இணைப்பை மாற்றம் செய்ய முடியும். விண்ணப்பித்து 15 நாட்களுக்குள் அனுமதி கிடைக்கவில்லை எனில், அவசர நிமித்தமாக, முறை மாற்ற திறப்பானை பயன்படுத்திக் கொள்ளலாம். மின் இணைப்பைப் பெற தயார் நிலையை தெரிவித்த பிறகு, 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்படும், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0