செம ஜாலியாக இருக்கு… தண்ணிரில் குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை அகிலா!

Author: Udhayakumar Raman
24 June 2021, 5:58 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் புதிதாக வெட்டப்பட்ட தொட்டியில் இறங்கிய கோயில் யானை அகிலா தனது துதிக்கையினால் நீரினை உடலின் மீது பீய்ச்சி அடித்து கொண்டும், தண்ணீரில் புரண்டும் உற்சாகமாக தொட்டியில் நிரப்பப்பட்ட நீருக்குள் குதூகலமாக ஆட்டம் போட்டது.

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் உள்ள யானை அகிலா. நீராடுவதற்காக காவிரி ஆற்றுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் அகிலா குளிப்பதற்காக திருவானைக்காவல் அருகே உள்ள நாச்சியார் தோட்டம் என்ற இடத்தில் 20க்கு 20 அடி என்ற அளவில் சாய்வு தளத்துடன், பத்தடி உயர குளியல் தொட்டி கட்டப்பட்டது. இதில் மின் மோட்டார் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று அகிலா யானையை பாகன் அங்கு அழைத்துச் சென்றார். அங்கு புதிதாக வெட்டப்பட்ட தொட்டில் இறங்கி நீராட துவங்கியதும் தனது துதிக்கையினால் நீரினை உடலின் மீது பீய்ச்சி அடித்து கொண்டும், தண்ணீரில் புரண்டும் உற்சாகமாக தொட்டியில் நிரப்பப்பட்ட நீருக்குள் குதூகலமாக ஆட்டம் போட்டது. காண்போருக்கு மகிழ்ச்சியை தந்தது. புதிதாக அகிலாவிற்கு கிடைத்த இந்த குளியல் தொட்டியின் மகிழ்ச்சியினை தனது பிளிருதல் மூலம் பாகனிடம் தெரிவித்தது.

Views: - 190

0

0