7 நாட்களாக அலற விட்ட அரிசிக்கொம்பன் சிக்கியது… யானையை மகிழ்ச்சியோடு வழியனுப்பிய மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 8:44 am

தேனி மேகமலை லோயர்கேம்ப், கம்பம் சுருளிப்பட்டி, யானை கஜம், கூத்தனாட்சி வனப்பகுதியில் சுற்றிவந்த அரிசி கொம்பன் இறுதியாக எரசக்கநாயக்கனூர் பெருமாள் கோயில் வன பகுதியில் சுற்றியது.

இதை பிடிப்பதற்கு ஏதுவான இடமாக இது அமைந்திருந்தது. இதற்கு பொறிவைத்த வனதுறையினர் நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது .

தொடர்ந்து மூன்று கும்கி யானைகள் அப்பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அரிசி கொம்பனின் ஆரோக்கியம் ஆராயப்பட்டது. யானைக்கு வேறு யாரும் துப்பாக்கியால் தாக்கி உள்ளனரா என்றும் மெட்டல் டிடக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது.

மூன்று கும்கி யானைகள் உட்பட வனத்துறையினரில் உதவியோடு அரிசி கொம்பன் லாரியில் ஏற்றினர். அழைத்து செல்லும் வழியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

அதிகாலையில் யானை பிடித்த தகவல் தெரிந்தால்அப்பகுதியில் கூடிய கிராம மக்களால் பரபரப்பு நிலவியது. மேலும் யானை பார்ப்பதற்கு குவிந்த மக்களை காவல்துறையினர் கலைத்து வருகின்றனர்.

  • The superstar has withdrawn from the film படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு நடிக்க முடியாது.. படத்தில் இருந்து விலகிய சூப்பர் ஸ்டார்!