தேசிய நெடுஞ்சாலைகளில் முகாமிடும் யானைகள் : வனத்துறை எச்சரிக்கை!!

18 September 2020, 12:16 pm
Elephants Roaming - updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை இரவு நேரங்களில் கடக்கும் யானைகள் வாகன ஓட்டிகள் வாகனத்தை கவனத்துடன் இயக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன தற்போது தாளவாடி ஆசனூர் மலைப்பகுதியில் நன்கு மழை பெய்து வனப்பகுதி முழுவதும் செழித்து பச்சை பசேலென காட்சி அளிக்கிறது.

இதனால் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறி சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் சாலையைக் கடப்பது வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே யானைகள் குட்டிகளோடு வனப்பகுதியை விட்டு வெளியேறி தீவனங்கள் உட்கொண்டு சாலையைக் கடந்து சென்றன.

எனவே சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையான ஆசனூர் வனச்சாலையில் வாகனங்களை இயக்கவும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கவனத்தோடு இயக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதே போல நீலகிரியில் ஒற்றை காட்டுயானை மரப்பாலம் அருகே வழிதெரியாமல் சாலையில் நின்றது. இதனால் வாகன ஒட்டிகள் அச்சம் அடைந்தனா். இருசக்கர வாகனஒட்டிகள் அச்சம் அடைந்து அங்கிருந்து வாகனத்தை போட்டு விட்டு ஒட்டம் பிடித்தனா்.

இதனால் மலைபாதையில் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது மேலும் காட்டுயானையை படம் பிடிக்க பொதுமக்கள் கூட்டம் கூடினா். சுமாா் ஒரு மணிநேரம் சாலையிலே காட்டுயானை நின்றதால் பரபரப்பு ஏற்ப்பட்டது
பின்னா் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த வனத்துறையினா் சாலையில் முகாமிட்டிருந்த காட்டுயானையை போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைபாதையில் நெடுஞ்சாலைத்துறையினா் சாலைப்பணிக்காக யானைகள் வரும் சாலையை அடைத்துள்ளதால் காட்டுயானை சாலையில் எந்தப்பக்கம் செல்வது என தவித்ததுசாலையில் வந்துள்ளணத , வனத்துறையினா் சாலையில் முகாமிட்டு கண்காணிக்க வேண்டும் என வாகனஒட்டிகள் கோாிக்கை விடுத்துள்ளனா்

Views: - 11

0

0