இது “Breakfast time“ : வாகனங்களை வழிமறித்த காட்டுயானைகள்!!

16 September 2020, 12:20 pm
MTp Elephants- updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் காட்டு யானைகள் படையெடுத்து வந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அதிகளவில் வனவிலங்குகள் உயிர் வாழ்ந்து வருகின்றன.

குறிப்பாக யானை, காட்டெருமை, புலி, கரடி, சிறுத்தை, மான் போன்ற வன உயிரினங்கள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் மூன்று காட்டு யானைகள் கோத்தகிரி முதலாவது கொண்டை ஊசி வளைவில் ஒய்யாரமாக சாலையில் உள்ள மரக் கிளைகளை உடைத்து பசியாற்றி கொண்டது.

இதனால் அந்த வழியில் சென்ற வாகனங்கள் சுமார் 1 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்றிருந்தன. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0