சுற்றுச்சுவரை இடித்து விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள் : சிறுமுகை அருகே தொடரும் அட்டூழியம்!!

31 January 2021, 4:30 pm
Elephant- Updatenews360
Quick Share

கோவை : சிறுமுகை அருகே காட்டுயானைகள் வீட்டின் சுற்று சுவரை உடைத்து வாழைத்தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்டது சம்பரவள்ளி புதூர் கிராமம். வனப்பகுதியினை ஒட்டியுள்ள இந்த கிராமத்தினுள் ஏராளமான விளைநிலங்களில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வாழைப்பயிர்களை குறிவைத்து காட்டுயானைகள் வனத்தை விட்டு வெளியேறும் நிகழ்வு சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.

இன்று அதிகாலை சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டுயானைகள் சம்பரவள்ளி புதூரில் சத்தி மேட்டுப்பாளையம் பிரதான சாலையை ஒட்டியுள்ள ஏட்டன் என்பவரது தோட்டத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளது

வீட்டின் முன்பு சுற்றுசுவரும் அதனை ஒட்டி வாழைத்தோட்டமும் இருந்த நிலையில் சுற்றுசுவரின் ஒரு பகுதியை இடித்து தள்ளிவிட்டு உள்ளே நுழைந்து வாழை
தோட்டத்தில் நுழைந்தது வாழை பயிர்களை சேதப்படுத்தியது

200 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியதுடன் அருகில் இருந்த குடியிருப்புகளுக்குள்ளும் நுழைந்து அரிசியை எடுத்து உண்ண முயன்றுள்ளது. பின்னர் சப்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் மற்ற விவசாயிகள் ஒன்றிணைந்து காட்டுயானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

சிறுமுகை வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வெளியேறுவது அதிகரித்து கொண்டே இருப்பதால் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 0

0

0