பலாப்பழத்திற்காக படையோடு வந்த யானைகள்.! தொந்தரவு செய்தால் அபராதம்.!!

4 August 2020, 7:05 pm
Ooty Elephant - Updatenews360
Quick Share

நீலகிரி : குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைபாதையில் உணவு மற்றும் தண்ணீருக்காக குட்டியுடன் சாலையை கடந்த காட்டுயானைகளால் போக்குவரத்து பாதிப்படைந்தது.

நீலகிாி மாவட்டம் குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைபாதையில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளதால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளது. மேலும் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக காட்டுயானைகள் சாலைகளை கடந்தவருகிறது.

இந்த நிலையில் குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைபாதையில் இச்சிமரம் அருகே சாலையை கடப்பதற்காக குட்டியுடன் காட்டுயானைகள் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த வனத்துறையினா் விரைந்து வந்து சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி காட்டுயானைகள் சாலையை கடந்த பிறகு வாகனங்களை அனுமதித்தனா்.

இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காட்டுயானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதால் வாகன ஒட்டிகள் புகைப்படம் எடுத்து தொந்தரவு கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என குன்னுாா் வனசரகா் சசிகுமாா் எச்சாிக்கை விடுத்துள்ளாா்.

Views: - 9

0

0