கல்லூரி மாணவி மீது தீராத காதல் : குடும்பம் நடத்த மாணவிக்கு “டார்ச்சர்“ கொடுத்த பேராசிரியர்!!

14 January 2021, 3:32 pm
Professor Arrest - Updatenews360
Quick Share

சென்னை : கல்லூரி மாணவியை காதலித்து கல்யாணம் செய்ய முயற்சித்த பேராசிரியர் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் பரிவில் பேராசியராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது.

இந்தநிலையில் தனது வகுப்பில் படிக்கும் கல்லூரி மாணவி மீது காதலில் மயங்கி விழுந்த பேராசிரியர் சதீஷ், தொடர்ச்சியாக லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதையடுத்து ஆசிரியருடன் பழகுவதை மாணவி தவிர்த்து வந்துள்ளார்.

ஆனால் மாணவியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட சதீஷ், மாணவியிடம் காதலிக்க கெஞ்சினார். ஆனால் மாணவியோ ஒரு குடும்பம் உங்களுக்கு உள்ளது, இது மாதிரி பேசுவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார்.

ஆனால் மாணவியை திருமணம் செய்ய முடிவு செய்த சதீஷ், மாணவியின் பெற்றோரிடம் சகஜமாக பேச ஆரம்பித்தான். பின்னர் மாணவியின் சான்றிதழ்களை கல்லூரியில் இருந்து திருஐடி மாணவிக்கு திருமணம் ஆனது போல போலியாக திருமண சான்றிதழை தயாரித்து, மாணவியிடம் காட்டி மிரட்டியுள்ளான். ஆனால் எதற்கும் மசியாத மாணவி முடியாது என கறாராக கூறிவிட்டார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோருக்கு சான்றிதழை அனுப்பி வைத்துள்ளான் இந்த சதீஷ், மேலும் சான்றிதழை வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளான்.

இதையடுத்து மாணவி திநகர் துணை ஆணையரை நேரில் சந்தித்து நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து கல்லூரி பேராசிரியர் சதீஷ்மாரை கைது செய்து 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 13

0

0