பொங்கியெழுந்த பெண்கள்… சந்து மதுபானக்கடையை அடித்து நொறுக்கி ஆவேசம் : சாலையில் ஆறு போல ஒடிய சரக்கு!!!

Author: Udayachandran RadhaKrishnan
29 April 2023, 8:09 pm

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமங்களான பூதிநத்தம். பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் உள்ள மது பிரியர்கள் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும்.

இதனை பயன்படுத்தி கொண்டு சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியா பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதிகளில் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமலும் எந்நேரமும் மதுஅருந்தி விட்டு மதுபோதைக்கு அடிமையாகி உள்ளனர்.

இவர்களின் உடல் நலம் பாதிப்படைந்து வருவதோடு மட்டுமல்லாமல், போதிய வருமானம் இன்றி இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஒரு சில குடும்பங்கள் பிரிந்து செல்வதோடு, தற்கொலை நிகழ்வும் அரங்கேறி உள்ளது.

இதனை எதிர்த்து அப்குதி கிராம மக்கள் இப்பகுதிகளில் மது விற்க அனுமதிக்க கூடாது என பாப்பாரப்பட்டி காவல் நிலையந்தில் பல முறை புகார் அளித்துள்ளனர்.

ஆனால் காவல் துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்கள் மாதந்தோறும் மாமூல் தருவதால் எந்த அதிகாரியும் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பூதிநத்தம் கிராமமக்கள் ஒன்று திரண்டு சட்ட விரோதமாக சந்துகடை வைத்து அரசு மதுபானம், வெளி மாநில மதுபாட்டிகள் வைத்து விற்பனை செய்யும் ஜெயராமன் என்பவரின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபானங்களை வீதியில் கொட்டி உடைதது சூறையாடினர்.

இதனால் மதுபானம் ஆறு போல் வீதியில் வழிந்தோடியது. தகவலறிந்து உடனடியாக வந்த காவல் துறையினர் வீட்டில் மேலும் மறைத்து வைத்திருந்த மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை அள்ளி சென்றனர்.

உடனடியாக காவல் துறையினர் துரித நடவடிக்கை மேற்கொண்டு சந்து கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் எனவும், இல்லையென்றால் மீண்டும் இது போன்ற நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Good News for Vijay And Trisha விஜய் – திரிஷா குறித்து விரைவில் குட் நியூஸ்.. பற்ற வைத்த பிரபலம்!
  • Views: - 393

    0

    0