அரசு பள்ளி மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்க : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan12 August 2021, 4:53 pm
சென்னை : பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மாணவர் மதிய உணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களின் மதிய உணவை பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மதிய உணவு கிடைக்காததால், மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது என்றும் உடல் உழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மூலம் கண்டறிந்து கல்வியைத் தொடர ஏற்பாடு செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 50 லட்சம் மாணவர்களுக்கு தடையின்றி மதிய உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
0
0