ஏறுமுகத்தில் இருந்த நீர் மட்டம் இறங்கியது! விவசாயிகள் கவலை!!

31 August 2020, 10:11 am
Cbe Bhavani Sagar- Updatenews360
Quick Share

ஈரோடு : கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக குறைந்தது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் கன மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் ஆகஸ்ட் மாதம் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கனஅடி நீர் 120 நாட்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் 99 அடியாக குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 99.85 அடியாகவும் நீர் இருப்பு 28.6 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 592 அடி எனவும் அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு 800அடி, காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் 200 கன அடி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கும் 2300 கன அடி நீர் வெளியேற்றம் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Views: - 0

0

0