20 பேரின் வாழ்த்து மழையில் இல்லத்தில் நடந்த எளிமையான திருமணம்..!!(வீடியோ)

26 March 2020, 2:16 pm
Erode Simple Marriage - Updatenews360
Quick Share

ஈரோடு : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியில் உள்ள வீட்டில் நடைபெற்ற பட்டதாரி மணமக்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் உட்பட 20 நபர்கள் மட்மே பங்கேற்றனர்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதனால் இந்தியா முழுவதும் பிரதம் மோடி 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவை பிரப்பித்துள்ளார். இந்த தடை உத்தரவில் அடிப்படையில் திருமணமண்டபங்களில் நடைபெற இருந்த ஆடம்பர திருமணங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது.

அதனால் நிச்சயக்கப்பட்ட திருமணங்களை வீட்டிலேயே எளிமையாக நடத்திவருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியில் உள்ள பட்டதாரி மணப்பெண் கவிப்பிரியாவிற்கும் கொமராபாளையம் பகுதியைச்சேர்ந்த பட்டதாரி மணமகன் பிரகாஷ் என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயக்கட்டு திருமணம் இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் ஆடம்பரமாக மூன்று நாட்கள் நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் செய்திருந்தனர்.

கொரேனா தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிரப்பித்ததையடுத்து அனைத்து திருமணமண்டபங்களில் நடைபெற இருந்த நிகழ்வுகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. அதனால் பெரியோர்களால் நிச்சயக்கட்ட திருமணத்தேதியை மாற்ற மனமின்றி ஆடம்பர திருமணத்தை ரத்து செய்துவிட்டு கோபிசெட்டிபாளையம் புகழேந்தி வீதியில் உள்ள மணமகளின் இல்லத்தில் முக்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த முடிவு செய்து இன்று அதிகாலை 5 மணிக்கும் மிகவும் எளிமையாகவும் குறைந்த உறவினர்களைக் கொண்டும் திருமணத்தை நல்லமுறையில் நடத்தி மகிழ்சியுற்றனர்.

மேலும் திருமண வீட்டிற்கு வந்த அனைவரையும் கைகழுவ வைத்த பின்னரே வீட்டினுள் அனுமதித்தனர். திருமணத்திற்கு முன்தாகவும் திருமணம் முடிந்த பின்னரும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். கொரோனா என்னும் கொடிய நோயை தடுப்பதில் மணமக்கள் உட்பட திருமணத்திற்கு வந்திருந்த அனைத்து உறவினர்களும் பெரும்கங்காற்றினர். மேலும் திருமணம் முடிந்த பின்னர் நடைபெறும் சடங்கு சம்பிரதாயங்களையும் ரத்து செய்து உறவினர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன் அரை மணிநேரத்தில் உறவினர்கள் அனைவரையும் வழியனுப்பிவைத்து ஊரடங்கு உத்தரவிற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.