சிதிலமடைந்த காந்தி சிலை.! புனரமைக்க குழு அமைப்பு.!!

13 August 2020, 4:51 pm
Gandhi Statue - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள காந்தி சிலையை புனரமைக்க குழு அமைக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பேருந்து நிலையம் முன்பு காந்தி மணிமண்டபம் உள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகள் மூலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு காந்தி மணிமண்டபம் நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் தியாகிகள் மூலம் பராமரிக்கப்பட்ட காந்தி மணிமண்டபம் பின்னர் நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாக காந்தி மண்டபம் உரிய பராமரிப்பு இல்லாததால் மேற்கூரைகள் மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் 150வது காந்தி பிறந்த நாளை கொண்டாடிவரும் நிலையில் புன்செய் புளியம்பட்டியில் காந்தி சிலையும் மணி மண்டபமும் மிகவும் சிதிலமடைந்து இருப்பது காந்திய ஆர்வலர்களையும் சமூக ஆர்வலர்களையும் மிகவும் வேதனைப் படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பொதுநல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக அண்ணல் மகாத்மா காந்தி சிலை புணரமைப்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டு இந்த குழு அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் காந்தி சிலையையும் மற்றும் மணி மண்டபத்தையும் புனரமைத்து புதுப்பொலிவுடன் திறக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக அண்ணல் மகாத்மா காந்தி சிலை புணரமைப்பு குழுவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு புளியம்பட்டி நகராட்சி ஆணையாளர் முத்துக்குமார் அவர்களை சந்தித்து காந்தி சிலையை புணரமைக்க உரிய நடைமுறைகளின் படி அனுமதி வழங்கி உதவுமாறு மனு வழங்கினர்.

Views: - 2

0

0