இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

3 September 2020, 12:55 pm
erode-road- - updatenews360
Quick Share

ஈரோடு : ஈரோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்ட 4வது கட்ட தளர்வில் மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 1ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அரசுப் பேருந்து சேவை தொடங்கிய நிலையில் நிகழ்ந்துள்ள இந்த விபத்து பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 13

0

0