பள்ளி மாணவர்களுக்கு விரைவில் காலாண்டு தேர்வு : அமைச்சர் கூறிய முக்கிய தகவல்!!

21 August 2020, 1:33 pm
Minister Sengottayan - Updatenews360
Quick Share

ஈரோடு : பள்ளி மாணவர்களுக்கு எப்போது காலாண்டு தேர்வு என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய தகவலை கூறியுள்ளார்.

கொரோன தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லாத நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி எப்போது திறக்கும் என எதிர்ப்பார்ப்பில் மாணவர்கள், பெற்றோர்கள் காத்துள்ளனர்.

தொலைக்காட்சிகள் மூலம் தற்போது வகுப்பு நடைபெறும் சூழலில் காலாண்டு தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: கொரோனா தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். 10, 12 மட்டுமின்றி 8, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது.