ஆட்டோ கவிழ்ந்து விபத்து : 30 பெண்கள் படுகாயம்!!

13 August 2020, 6:07 pm
Sathy Accident - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நூறுநாள் வேலை திட்ட பணிக்கு சென்ற 30 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொத்தமங்கலம், இந்திராநகர், காராச்சிக்கொரை கிராமத்தை சேர்ந்த 30 பெண்கள், கொக்கரகுண்டியில் நடைபெறும் நூறுநாள் வேலை திட்டத்தின் மூலம் நடைபெறும் குட்டை அகலப்படுத்தும் பணிக்காக மினி ஆட்டோவில் பயணித்தனர்.

பேருந்து இயக்கப்படாததால், வழக்கமாக செல்லும் ஆட்டோவில் இன்றும் பயணித்துள்ளனர். மினி ஆட்டோவை ஓட்டுனர் ரமேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டு கொக்கரகுண்டி கிராமத்திற்கு புறப்பட்ட மினி ஆட்டோ, கொத்தமங்கலம் அசிசி மருத்துவமனை அருகே வளைவில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் பயணித்த பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். பெண்கள் சாலையில் சிதறிக் கிடந்ததை பார்த்த பொதுமக்கள், அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதில் பயணித்த 30 பெண்களும் பலத்த காயமடைந்தனர். இதில் எட்டு பெண்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து பவானிசாகர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஆட்டோவை இயக்கிய ஓட்டுனர் ரமேஷ் குடி போதையில் இருந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக கூலி தொழிலாளிகள் தெரிவித்தனர்.

Views: - 9

0

0