திமுகவில் இருந்து பாஜகவிற்கு மாறிய ஊர் மக்கள்.!

9 August 2020, 5:09 pm
Erode DMK to BJP 1- Updatenews360
Quick Share

ஈரோடு : ஈரோடு அருகே 20 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் திமுகவில் இருந்து பாரதீய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டியை இழிவுப்படுத்திய விவகாரம் உலகமெங்கும் வாழும் தமிழர்களை உலுக்கியது. இந்த விவகாரத்தில் திமுக வாய் திறக்காததால் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

பற்றாகுறைக்கு, ஆ.ராசா பேசிய பேச்சு கொஞ்சம் நஞ்சமல்ல. தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் இந்து மதம் குறித்து பேசி மக்களிடம் வாங்கி கட்டிக் கொண்டு வருகிறார். இந்த விவகாரம் தமிழகத்தில் பூதகரமாக மாறியுள்ள நிலையில், திமுக தொண்டர்களின் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த நேரத்தில் நல்ல பெயரை வாங்கி தராமல் திமுக ஐடி விங், திமுகவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதாக தலைமை சம டென்ஷனில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஈரோடு அருகே ஒரு ஊரே ஒன்று திரண்டு திமுகவில் இருந்து பாஜகவிற்கு தாவியுள்ளது.

கந்த சஷ்டி கவசம் குறித்து யூட்யூப் வலைதளத்தில் கருப்பர் கூட்டம் வெளியிட்டது குறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்டாலின், எந்த ஒரு கண்டனம் தெரிவிக்காததால் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வசித்து வரும் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் திமுகவில் இருந்து விலகி தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

முன்னதாக கோவிலில் கந்தசஷ்டி கவசம் பாடல் பாடி வேல் பூஜை செய்தனர். பின்னர் 20 குடும்பங்கள் ஒன்றாக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கறுப்பர் கூட்டம் குறித்து ஸ்டாலின் எந்த கண்டனம் தெரிவிக்காமல் அவர்களுக்கு ஆதரவாக உள்ளார். ஸ்டாலின் செயல், மக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளதாகவும், இந்து தர்மத்தைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு இந்துவுக்கும் உண்டு. இதனால் திமுகவில் தொடர விருப்பமில்லை என தி.மு.க கிளைச் செயலாளராக இருந்த தேவராஜ் கூறியுள்ளார்.

Views: - 11

0

0