ஆடிப்போன ஆட்டுச்சந்தை : 6 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை!!

13 November 2020, 12:11 pm
goat sales- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள புகழ்பெற்ற எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் 6 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் மிகவும் முக்கியமான சந்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஆட்டுச்சந்தை. வாரம் தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு மதுரை, சென்னை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருவது வழக்கம்.

வழக்கமாக வாரம் தோறும் 2 கோடி ரூபாய் வரையிலும், பண்டிகை காலங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும் ஆடுகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு எட்டயபுரத்தில் இன்று தீபவாளி சிறப்பு ஆட்டுச்சந்தை நடைபெற்றது. நாளை தீபாவளி என்பதால் விற்பனைக்கு அதிகளவில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருந்தன.

விலையும் கடந்த வாரங்களை விட சற்று குறைவாக இருந்த காரணத்தினால் வியாபாரிகள் ஆர்வமுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். 6 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை ஆடுகள் எடைக்கு ஏற்ப இளம் ஆடுகள் அதிகளவில் இறைச்சிக்காக வியாபாரிகள் வாங்கி சென்றனர்.

கடந்த ஆண்டு தீபாவளியை பண்டிகையை விட இந்தாண்டு ஆடுகள் வரத்தும் அதிகம், விலையும் குறைவு என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் 5 கோடிரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு 6 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக சந்தை மூடப்ட்டு இருந்த நிலையி;ல ஆடுவளர்ப்போர், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தன. தளவுர்வுக்கு பின்னர் ஆட்டுச்சந்தை திறக்கப்பட்டாலும் வியாபாரம் மந்தமாக இருந்த நிலையில் தீபாவளி வியாபாரம் கை கொடுத்துள்ளதால் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்களும், வியாபாரிகளும் மிகழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 47

0

0