விவசாயிகள் பட்டினியால் சாகும் போது கூட காங்கிரஸ் கையை ந****யது திமுக : அதிமுகவின் விந்தியா கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 2:04 pm
Vinthaya - Updatenews360
Quick Share

அதிமுகவின் 52 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலைமை கழக பேச்சாளரான நடிகை விந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர்,திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். அதிமுகவினர் நாற்காலிக்கு சண்டை போடுவதாக பால்டாயில் அமைச்சர் உதயநிதி விமர்சிப்பதாக கூறிய அவர்,கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பொது நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அமர்ந்திருந்த நிலையில் அவரை தட்டி எழுப்பி அந்த இடத்தில் தனது மகனான உதயநிதி ஸ்டாலினை அமர வைத்ததாகவும் அதே நாற்காலியில் மற்ற அமைச்சர்கள் உட்கார்ந்து இருந்தால் அவர்களை எழுப்புவார்களா என கேள்வி எழுப்பியத்துடன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் அவர் எழுப்பப்பட்டதாகவும் இவர்களெல்லாம் சமூக நீதி பேசுகிறார்கள் எனவும் விமர்சித்தார்.

தமிழகத்தில் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறதோ இல்லையோ ஆனால் ஒயின் ஷாப்பில் குடிகாரர்களுக்கு சப்ளை தடையில்லாமல் நடந்து வருவதாகவும் தமிழகத்தில் யாருமே நிம்மதியாக இல்லாமல் அனைத்து தரப்பினரும் தெருவுக்கு வந்து போராடும் சூழலில் காவல்துறையை வைத்து போராடுபவர்களை அடித்து தூக்கி எறிவதாகவும் தெரிவித்தார்.

டெல்டா விவசாயிகள் பட்டினியில் சாகும்போது கூட திமுகவினர் காங்கிரஸ் கையை நக்கி வருவதாகவும் திமுகவினர் வெறும் அடிமைகள் இல்லை கொத்தடிமைகள் எனவும் சாக்கடையை குத்தும் கம்பியால் கூட பயன் இருக்கும் ஆனால் திமுக எம்பி களால் எந்தவிதமான பயனும் தமிழக மக்களுக்கு இல்லை எனவும் கடும் விமர்சனத்தை முன் வைத்தார்.

இதேபோல் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் தராத காங்கிரஸ் உடன் கூட்டு இல்லை என உதயநிதி ஸ்டாலினால் ஒரு ட்வீட் போட முடியுமா என கேள்வி எழுப்பியதுடன் காவிரிக்காக மல்லிகார்ஜுன கார்கே அல்லது சித்தராமையாவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட முடியுமா எனவும் தமிழக விவசாயிகளைப் பற்றி எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கவலை இல்லை., அவருக்கு தலைக்கு மேல் வேறு பணிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

திமுகவைச் சேர்ந்த பலர் பல வழக்குகளுக்காக நீதிமன்றம் சென்று வந்தாலும் எந்த வழக்குக்கும் எந்த ஒரு அறிக்கை ஒரு பேட்டி இல்லாமல் செந்தில் பாலாஜி கைதின்போது மட்டும் சீண்டி பார்க்காதீர்கள் தாங்க மாட்டீர்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டதாகவும் ஒருமுறை சீண்டிப் பார்க்காதீர்கள் என சொன்னதற்கே அவர்கள் நோண்டி பார்த்து விட்டதாகவும் இதற்கு மேல் அவர் பேசினால் அனைவருக்குமே ஆபரேஷன் தான் எனவும் நகைப்புடன் கூறினார்.

சனாதனத்திற்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம் எனவும் உதயநிதி ஸ்டாலினுக்கு சனா என்றால் சனாக்கானையும் தனா என்றால் தமன்னாவையும் தான் தெரியும்., ஆனால் அவர் சனாதனத்தை பற்றி பேசுகிறார் எனவும் கூறினார்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஹிஜாப் போராட்டம் குடியுரிமை போராட்டம் என மைனாரிட்டி மக்களை தூண்டிவிட்டு எத்தனையோ போராட்டங்கள் நடத்தியதாகவும் திமுக ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் மைனாரிட்டி மக்களுக்காக என்ன செய்தார்கள் என மக்கள் சிந்திக்க வேண்டும் எனவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்தார்களா எனவும் வினா எழுப்பியதுடன், ஆளுநருக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும் பிரச்சனை வந்தால் பழியை தூக்கி ஆளுநர் மீது போடுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் செய்யும் அரசியல் இது எனவும் குற்றம் சாட்டினர்.

சனாதனம்,பகுத்தறிவு,சமூக நீதி என பேசிவிட்டு குஷ்புவுக்கு கோயில் கட்டினாலும் பால் குடத்தை தூக்கிக்கொண்டு முதல் ஆளாக திமுகவினர் நிற்பார்கள் எனவும் திமுக விடமிருந்து கோவிலையும் காப்பாற்ற முடியாது கடவுளையும் காப்பாற்ற முடியாது எனவும் தெரிவித்தார்.

ஆயுத பூஜைக்கு எழுதும் பேனாவை பூஜையில் வைத்து கும்பிட்டால் பைத்தியக்காரர்கள் என்று சொல்லும் திமுக, எழுதாத பேனாவிற்கு 80 கோடி செலவு செய்து கடலில் சிலை வைக்கிறார்கள் என்றும் ஆனால் பகுத்தறிவு நாத்திகர்கள் என கூறி யாரை முட்டாளாக்க பார்க்கிறார்கள் என்றார்.

மேலும் பெரம்பலூர் பொதுத்தொகுதி என்று அறிவிக்கப்பட்ட பிறகும் ஆ.ராசாவை ஏன் அங்கு நிறுத்தவில்லை நீலகிரி தனி தொகுதியில் மட்டும் நிறுத்துகிறார்கள் என்றும் ஆ.ராசாவை தலித்தாக மட்டுமே பார்க்கிறார்கள் அவரை ஒரு தலைவராக பார்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளை அடக்குவதற்காக எடுக்கப்படும் ஆயுதம் தான் சனாதனம் சமூக நீதி போன்றவை எல்லாம் எனக்கூறி அமைதிப்படை திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் மணிவண்ணன் இடையேயான வசனத்தை நினைவு கூர்ந்து அதன் அடிப்படையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி செய்கிறார் எனவும் கூறியதால் கூட்டத்தில் சிரிப்பொலி எழுந்தது.

விவசாயத்தையும் டாஸ்மாக் மதுபான கடையையும் ஒப்பிட்டு அடுக்கு மொழியில் பேசி திமுகவை விமர்சித்த விந்தியா அதிகார பலத்திலும் பண பலத்திலும் திமுக தள்ளாடிக் கொண்டிருக்கிறது ஆனால் தமிழக மக்களை மட்டும் உண்மையான போதையில் மட்டும் தள்ளாட வைக்கிறது என்றும் கூறினார்.

அதிமுக என்பது 52 ஆண்டு கால ஆலமரம் என்றும் அதனை நேற்று முளைத்த புல் எல்லாம் அசைக்க நினைப்பது பைத்தியக்காரத்தனம் என்றும் காக்கா கூண்டிற்குள் முட்டையிட்ட குயில் அதன் சத்தத்தாலேயே கூண்டை விட்டு வெளியேறியது போன்று தற்போது சிலர் சத்தமிட்டு கூட்டணியை விட்டு வெளியேறியதாகவும் தமிழகத்தைப் பொறுத்தவரை குடும்பமே கட்சி என்று வாழும் திமுக, மற்றொன்று ஒட்டுமொத்த தமிழக மக்களே கட்சி என்று வாழும் அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியில் உள்ளது எனவும் நடுவில் வந்த சில பேர் கட்சியை எப்படி நடத்தணும்?

அரசியல் எப்படி செய்ய வேண்டும் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் எதிர்க்கட்சியாக எப்படி சந்திக்க வேண்டும் என்று எங்களுக்கு வகுப்பு எடுப்பதாகவும் ,நீங்கள் வகுப்பு எடுக்கும் பள்ளியில் நாங்கள் தலைமை ஆசிரியர் என்றும் கூறிய விந்தியா நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாமலை திரைப்பட வசனத்தை போன்று கணக்கு வசனத்தை கூறி பாஜக அண்ணாமலை மற்றும் திமுகவினரை கடுமையாக விமர்சித்தார்.

Views: - 211

0

0