‘எப்படி ஏறியதோ… அதே வேகத்தில் இறங்கும் தங்கத்தின் விலை’ : வாடிக்கையாளர்கள் குஷி..!

25 August 2020, 3:46 pm
Gold - updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, மளமளவென குறைந்து வருகிறது.

வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டது. கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் குறைந்து மக்களை மகிழ்ச்சி படுத்தியுள்ளது.

இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ. 4,958ஆக விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.360 சரிந்து ரூ. 39,584க்கும் விற்பனையாகியது.

இந்த நிலையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.72 குறைந்து ரூ. 4,921ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.576 சரிந்து ரூ. 39,368க்கும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.800 குறைந்து ரூ.71,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து இறங்கு முகமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களிடையே இழந்த சந்தோஷத்தை மீட்டுக் கொடுத்துள்ளது.

Views: - 0

0

0