பேச்சு மட்டும் தான் மகாத்மா மாதிரி… ஆனா, பண்றது எல்லாமே ஊழல்… திமுகவை கிழிகிழி என கிழித்த திண்டுக்கல் சீனிவாசன்!!!

Author: Babu Lakshmanan
27 March 2024, 8:56 pm

போதைப் பொருட்கள் கஞ்சாவுக்கு துணை போகும் முதலமைச்சர் ஸ்டாலின் யோக்கியன் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தலையின் மீது கத்தி தொங்கிக் கொண்டு உள்ளது எந்த நேரத்தில் எந்த தீர்ப்பு வரும் என்று தெரியாது, மகாத்மா காந்தியை போல முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எந்தத் தவறுமே செய்யாதது போல், லஞ்சம் வாங்காதது போல், நேர்மையான கட்சி என்ற மாய தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பகுதியில் இன்று அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நெல்லை முகம்மது முபாரக் அவர்களின் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் தர்மத்துப்பட்டி தனியார் கல்யாண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் சுப்ரமணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் கழக பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று வேட்பாளரை அறிமுக செய்தனர்.

பின்னர் பேசிய முன்னாள் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :- திமுகவை சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி தலையின் மீது தற்போது கத்தி தொங்கி கொண்டு உள்ளது. எந்த நேரத்தில் எந்த தீர்ப்பு வரும் என்று தெரியாது. அவர்கள் ஏற்கனவே செய்த தவறுக்கு வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் நிரபராதி என்று தீர்ப்பு வழங்கினர். ஆனால் கடவுளாக பார்த்து ஒரு நீதிபதியே பெரியசாமி, பொன்முடி, நேரு உள்ளிட்ட 10,13 தமிழக அமைச்சர்கள் மீது லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்திருக்கிறார்கள் என்று விடுதலை செய்த அத்தனை அமைச்சர்கள் மீதான வழக்குகளை தோண்டி துருவி எடுத்து விசாரணை செய்து வருகின்றார்.

வருகின்ற 28ஆம் தேதிக்குள் அமைச்சர் பெரியசாமி ஜாமீன் பெற வேண்டும், விசாரணை எல்லாம் நடைபெற்று வருகிறது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் மகாத்மா காந்தியை போல பேசுகின்ற ஸ்டாலின், திமுகவின் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தங்களது கட்சி எந்த தவறுமே செய்யாதது போல லஞ்சமே வாங்காதது போல பேசி வருகின்றனர். எம்ஜிஆர், காலத்தில் விஞ்ஞான ரீதியாக லஞ்சம் வாங்குவதற்கு ஒருத்தர் இருக்கிறார் என்றால் அது கருணாநிதி தான். அவர்கள் செய்த ஊழலை சொல்லி எம்ஜிஆர் அவர்களை ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தோம்.

போதைப் பொருட்கள் கஞ்சாவுக்கு துணை போகும் முதலமைச்சராக ஐயா ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அதனால் அவர் யோக்கியன் என்று சொல்ல முடியாது என்று என்று பேசினார். ஆகவே பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்குகளை சேகரித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!