என்னையும் தான் அப்படி சொன்னாங்க… நான் ஒன்னும் அண்ணாமலையை பற்றி பேசலையே ; செல்லூர் ராஜு விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
5 April 2024, 2:34 pm

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நான் பாஜக தலைவர் அண்ணாமலையை கொச்சை வார்த்தைகளால் தவறாகப் பேசவில்லை என்பது ஊடகங்களுக்குத் தெரியும்.

மேலும் படிக்க: அம்மா நினைப்பு வந்ததும் கண்ணீர் விட்டு அழுத ஜோதிமணி… பிரச்சாரத்தின் போது ஆறுதல் கூறிய பொதுமக்கள்..!!

என்னையும் தான் தெர்மோகோல் விஞ்ஞானி என சமூக வலைத்தளங்கள் கூறின. அம்மா ஜெயலலிதா பற்றியும், அண்ணா பற்றியும் அண்ணாமலைதான் தவறாகப் பேசினார். மீனவர்கள் ஓட்டுக்களைப் பெறவே கச்சதீவுப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது பாஜக.

17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் புரிந்த பாஜக, இரு அவைகளைக் கூட்டி, கச்சத் தீவை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்காமல், மீனவர்களின் வோட்டு வங்கியை குறி வைத்தே, தற்போது தேர்தல் நேரத்தில் இதைப் பற்றி பேசி வருகிறது, என தெரிவித்தார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!