மிரட்டிய பாஜக.. துணிச்சல் காட்டிய இபிஎஸ்… பாஜகவுக்கு வாய்ப்பே இல்ல ; வைகைச் செல்வன் பரபர பேச்சு

Author: Babu Lakshmanan
16 April 2024, 11:24 am
Quick Share

பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவுக்கு கீழாகத்தான் வாக்குகளை பெற முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் இணைந்து முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், பழங்காநத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் டாக்டர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும் ராட்சச கிரேன் மூலமாக பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு விமர்சனம்!!

தொடர்ந்து பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது;- மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கக்கூடிய திட்டத்தை அதிமுக கொண்டு வந்துள்ளது. மதுரை மாவட்டத்திற்கு 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ளான திட்டங்களை அதிமுக அரசு தந்துள்ளது. ஆகவே மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என பேசினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசும்போது;- திமுக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிருப்தி, மகளிர் உதவித்தொகை தொகை வழங்குவதில் குளறுபடி, ED, IT உள்ளிட்டவைகளை கொண்டு ரெய்டு விடுவோம் என்று பாஜக மிரட்டியபோதும் எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது.

திமுக ஆட்சியில் மக்களின் அதிருப்தி, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளிட்ட ஐந்து காரணங்களுக்காக மக்கள் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்து அதிமுகவை மக்கள் வெற்றி பெறச் செய்ய முடிவு செய்து விட்டார்கள்.

பாஜக தலைவர்கள் எத்தனை முறை தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாலும் நோட்டாவுக்கு கீழாகத்தான் வாக்குகளை பெற முடியும், தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதிமுகவை வெற்றி பெறச் செய்ய மக்கள் முடிவு செய்து விட்டார்கள். வைகை நதிக்கரையில் இருந்து டாக்டர் சரவணன் என்ற நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்து யமுனை நதிக்கரைக்கு அனுப்பி வையுங்கள், என பேசினார்.

Views: - 91

0

0

Leave a Reply