மரக் கூண்டில் பராமரிக்கப்படும் ரிவால்டோ என்ற காட்டு யானையை நிபுணர் குழு பார்வை

10 July 2021, 9:59 pm
Quick Share

நீலகிரி : சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முதுமலையில் புலிகள் காப்பகம் வாழைத்தோட்டம் என்ற இடத்தில்  மரக் கூண்டில் பராமரிக்கப்படும் ரிவால்டோ என்ற காட்டு யானையை இன்று  பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

கடந்த ஜனவரி 2013 ஆம் ஆண்டு தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக தன்னால் உணவு தேட முடியார நிலையில், குடியிருப்பு மற்றும் சாலை  ஓரங்களில் நின்றுக் கொண்டு பார்வையாளர்கள் தரும் உணவு பண்டங்களை உட்கொண்டு வளர்ப்பு யானை போல் சுற்றி திரிந்து வந்த இந்த  யானையால்  பொதுமக்களின் உயிருக்கும் உடமைக்கும்  அச்சுறுத்தலாக உள்ளதாக வாழைத்தோட்டம், மாவனல்லா, மசினகுடி சுற்றுப்புற மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து,

இந்த யானை மரக் கூண்டில் வைத்து தும்பிக்கை காயத்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மரக் கூண்டில் ரிவால்டோ காட்டு  யானை அடைக்கப்ட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டதோடு, விலங்குகள் நல ஆர்வலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி மேனகா காந்தி தமிழக முதல்வர் திரு ஸ்டாலினுக்கு ரிவால்டோவை உடனடியாக மரக் கூண்டிலிருந்து விடுவிக்குமாறு கோரியதையடுத்து இந்த நிபுணர் குழு இன்று ரிவால்டோ யானையை நேரில் பார்வையிட்டு அதன் உடல் நிலை மற்றும்  பராமரிக்கப்படும் நிலை  குறித்து விரிவாக ஆய்வு செய்தது.

ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடையே பேசிய கால்நடை மருத்துவர் Dr. மனோகரன், ரிவால்டோ யானையின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ததாகவும், குழு உறுப்பினர்கள் கூடி ஆலோசனை செய்து  கூண்டில் பராமரிப்பை தொடர்வதா அல்லது வனத்தில் விடுவதா என இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார். 

Views: - 59

0

0