இந்த காலத்துல இப்படி ஒரு காதலா : முகம் பார்க்காத முகநூல் காதல்… காதலிக்கு நேர்ந்ததை எண்ணி காதலன் எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2022, 12:51 pm
Fb Lovers Dead- Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : முகநூலில் காதல் ஏற்பட்டு காதலி உயிரிழந்த செய்தியை கேட்டு காதலன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷிவந்தியம் அருகே மேலதேனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் வாழப்பாடி அருகே உள்ள பெத்தநாயக்கன் பாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் மணிகண்டன் பேஸ்புக் மூலமாக பூமிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பூமிகா கடந்த 26 ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த மணிகண்டன் கடந்த 2 ம் தேதி எலி பேஸ்ட் தின்று உள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மணிகண்டன் பலியானார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 362

0

0