பேஸ்புக் காதல் விவகாரம் : வாலிபரை கடத்திய இளம்பெண்..! இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி..!

8 September 2020, 5:56 pm
trichy crime - updatenews360
Quick Share

திருச்சி : பேஸ்புக் மூலமாக பழகிய காதலனை இளம்பெண் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவரது மகன் வினோத்குமார் (31). இவர் பண்ருட்டியில் பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். பேஸ்புக்கில் இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருச்சி காஜாமலையை சேர்ந்த ரகமத் நிஷா (20) நண்பரானார்.
அப்போது உங்களை நேரில் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருக்கிறது. நேரில் வர முடியுமா? என அந்தப் பெண் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்த வினோத்குமாரை திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானம் இருக்கும் இடத்திற்கு வர சொல்லியிருக்கிறார் அந்த பெண். அங்கு வந்த வினோத்குமார் சுமார் 45 நிமிடமாக காத்திருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், நீங்கள்தானே பண்ருட்டியில் இருந்து வந்தவர் என கேட்டனர். அதற்கு அவர் ஆமாம் என்றதும், ஆட்டோவில் குண்டுகட்டாக தூக்கிப்போட்டு கடத்தி சென்றனர். திருச்சி சங்கம் ஓட்டல் எதிரே உள்ள வ.உ.சி.தெருவில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வினோத்குமாரை ஒரு அறையில் அடைத்த மர்ம கும்பல், ஒரு லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

பணம் இல்லை என்றதும் மோட்டார் சைக்கிளை பறித்துக்கொண்டு ஐய்யப்பன் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானாவில் விட்டு சென்றனர். அங்கிருந்து சென்ற வினோத்குமார் அருகில் உள்ள கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தார். ஆனால், கடத்தல் சம்பவம் கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால் அங்கு சென்று புகார் கொடுக்க போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட இளம்பெண் மற்றும் அவரது கூட்டாளிகளான, திருச்சி – மதுரை ரோடு வள்ளுவர் தெருவை சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் ஆசீக் என்ற நிவாஷ் (26) மற்றும் திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவை சேர்ந்த முமகது பாரூக் என்பவரின் மகன் முகமது யாசர்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Views: - 10

0

0