இன்ஸ்பெக்டர் முத்திரையுடன் போலி சிபாரிசு கடிதம்: ஊர்க்காவல் படை வீரர் அதிரடி கைது…

Author: kavin kumar
4 January 2022, 4:56 pm
Quick Share

திருச்சி: சமயபுரத்தில் காவலர்களுக்கு போலி சிபாரிசு கடிதம் தயாரித்து கொடுத்த ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள நெ.1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த வேம்படியான் மகன் சிலம்பரசன். சிலம்பரசன் தமிழ்நாடு ஊர்காவல் படையில் காவலராக சமயபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றி வருகிறார் . சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு வரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமயபுரம் காவல்நிலையம் அல்லாத பிற காவலர்களுக்கு கொடுக்கும் சிபாரிசு கடிதத்தை போலியாக தயாரித்துள்ளார் சிலம்பரசன்.

அதாவது சிபாரிசு கடிதங்களை தானை தயாரித்ததுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கையெழுத்தும், இன்ஸ்பெக்டர் முத்திரை சீலையும் போலியாக பயன்படுத்தியுள்ளார். இந்த போலி கடிதங்களை வெளியூரிலிருந்து வரும் நபர்களை அழைத்துச் செல்வதற்கு பணம் பெற்று, பயன்படுத்தியதாக கோயில் கண்காணிப்பாளர் சாந்தி சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதி்வு செய்து சிலம்பரசனை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் கீழ் முசிறி கிளைச் சிறையில் அடைத்தனர்.

Views: - 305

0

0