போலி எம்.சாண்ட் விற்பனையை தடுக்கக்கோரி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை மனு

Author: Babu
4 February 2021, 2:20 pm
Msand - updatenews360
Quick Share

போலி எம்.சாண்ட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கட்டுமானத்துறை மீண்டும் தலைதூக்கி வரும் நிலையில், போலி எம்.சாண்ட் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரியம், கோவை மாவட்ட ஆட்சியர் நிர்வாகங்களுக்கு கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள்‌ நல சங்க தலைவர்‌ உதயகுமார்‌, செயலாளர்‌ கே.சி.பி.சந்திர பிரகாஷ்‌ ஆகியோர்‌ எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-

கோவையில்‌ கட்டடங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்‌ வகையிலான போலியான , தரமற்ற எம்‌ சாண்ட்‌ விற்பனை அதிகமாகி வருகிறது. கிரசர்‌ பவுடரில்‌ எம்‌ சாண்ட்‌ கலப்பது பரவலாகிவிட்டது. இரண்டு யூனிட்‌ எம்‌.சாண்ட்‌, இரண்டு யூனிட்‌ குவாரி டஸ்ட்‌ பவுடர்‌ கலந்து எம்‌.சாண்ட்‌ என விற்பனை செய்கிறார்கள்‌. எம்‌ சாண்ட்‌ என வெளித்தோற்றத்திற்கு காட்டும்‌ வகையில்‌ தண்ணீர்‌ கலப்பதும்‌ நடக்கிறது. ஜா மற்றும்‌ கோன்‌ கிரசரில்‌ தயாரிக்கப்படும்‌ தரமற்ற எம். சாண்டை வி எஸ்‌ ஜ இயந்திரத்தில்‌ தயாரிக்கப்படும்‌ தரமான எம்‌.சாண்ட்‌ போல்‌ காட்டுகிறார்கள்‌.

மசனை மற்றும்‌ கிராவல்‌ மண்ணை அரைத்து அதை எம்‌ சாண்ட்‌ வாசரில்‌ கழுவி வெள்ளை எம்.சாண்ட்‌ என விற்பனை செய்கிறார்கள்.‌ இந்த வகையான எம்‌.சாண்ட்‌ பயன்படுத்துவது கட்டடங்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்‌.

பொதுப்பணித்துறையின்‌ தர பரிசோதனை சான்று, வி.எஸ்‌. ஐ அப்ரூவல்‌ சான்று பெற்று தரமாக தயாரிக்கப்படும்‌ எம்‌. சாண்ட்‌ மட்டுமே கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்‌. இதர போலியான எம்‌.சாண்ட்‌ உற்பத்தி செய்து விற்பனை செய்பவர்கள்‌ மீது பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம்‌, மாவட்ட நிர்வாகம்‌ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. போலி எம்.‌ சாண்ட்‌ பறிமுதல்‌ செய்து அப்புறப்படுத்த வேண்டும்‌.

பொதுமக்களை ஏமாற்றி குவாரி பவுடர்களை எம்.‌ சாண்ட்‌ தோற்றத்தில்‌ விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்‌. போலி எம்‌.சாண்ட்‌ ஆதிக்கம்‌ அதிகமானால்‌ பல லட்ச ரூபாய்‌ செலவு செய்து கடன்‌ வாங்கி வீடு கட்டும்‌ பொது மக்கள்‌ அதிகம்‌ பாதிக்கப்படுவார்கள்‌. போலி எம்‌.சாண்ட்‌ மூலம்‌ கட்டப்பட்ட கட்டிடங்கள்‌ சில மாதங்களில்‌ விரிசல்‌ விட்டு பழுதாகிவிடும்‌. போலியான எம்‌.சாண்ட்‌ மற்றும்‌ பி சாண்ட்‌ தயாரிக்கும்‌ கிரஷர்‌ மற்றும்‌ குவாரி யூனிட்டுகள்‌ தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும்‌. தரமற்ற. ஆபத்தான எம்‌.சாண்ட்‌ தயாரிக்கும்‌ நிறுவனங்களை கண்டறிந்து கடும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 74

0

0