முகநூலில் ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றி அவதூறு : திமுக நிர்வாகிகள் கைது!!
18 January 2021, 6:50 pmகோவை : முகநூலில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்ட திமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்க உள்ள நிலையில், திமுக பிரமுகர்கள் முறைகேடான சம்பவங்களில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. கோவை போத்தனூர் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியதால் திமுகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொள்ளாச்சியில் இரண்டு திமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் நாகராஜ் மற்றும சுதர்சன் ஆகியோர் முகநூலில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாச புகைப்படங்களை பகிரிந்துள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட தெற்கு அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சதீஷ்குமார் என்பவர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், முகநூலில் ஆபாசமான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து அந்த புகைப்படத்தில் இருப்பவர் தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் மகன் என்று அவதூறாக பதிவு செய்வதாக குறிப்பிட்டிருந்தார். இதை தட்டிக் கேட்ட தன்னையும், தன்னுடன் சேர்ந்து வந்த இரண்டு பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து திமுக நிர்வாகிகள் இருவரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். அடுத்தடுத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் திமுகவினரால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். இது போன்ற பொய்யான தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
0